அரசு பள்ளியில் ரீல்ஸ்: த.வெ.க. நிர்வாகி நீக்கம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஒரு அரசு பள்ளி வகுப்பறையில் த.வெ.க.வினர் முதல்வர் விஜய் போட்டோவை வைத்து ரீல்ஸ் எடுத்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது.
அரசு பள்ளியில் தவெக நிர்வாகி ரீல்ஸ்
அரசு பள்ளியில் தவெக நிர்வாகி ரீல்ஸ்அரசு பள்ளியில் தவெக நிர்வாகி ரீல்ஸ்
Published on

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே ஒரு அரசு பள்ளி வகுப்பறையில், சுமார் 20-க்கும் மேற்பட்ட த.வெ.க.-வினர் சென்று, முதலமைச்சர் விஜய் புகைப்படத்தை வகுப்பறை சுவரில் மாட்டி, ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் கடும் விமர்சனம் செய்தனர்.

இந்த நிலையில் உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளரான ஏ. ராஜேஷ் பதவி நீக்க செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக தவெக கட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி உத்திரமேரூர் மேற்கு ஒன்றிய செயலாளராக பொறுப்பு வகித்து வந்த ஏ. ராஜேஷ் கழகத்தின் நற்பெயருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் அவர் வகித்து வந்த ஒன்றிய செயலாளர் மற்றும் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் இன்று முதல் நீக்கப்படுகிறார். எனவே கழக நிர்வாகிகளும், தோழர்களும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வுண்டும் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வாறு தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com