ரம்ஜான் பண்டிகை: தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்

காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.
ரம்ஜான் பண்டிகை: தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் உற்சாக கொண்டாட்டம்
Published on

ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகை நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாப்படுகிறது.

இஸ்லாமிய மார்க்கத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றான ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகை, இன்று தமிழகம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது.

ஒரு மாத கால புனித ரமலான் நோன்பை நிறைவு செய்யும் விதமாக, ஷவ்வால் மாதத்தின் முதல் பிறை தென்பட்டதைத் தொடர்ந்து இந்த விழா கோலாகலமாகத் தொடங்கியுள்ளது.

காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, தென்காசி உள்பட அனைத்து மாவட்டங்களிலும் ரம்ஜான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மசூதிகள் மற்றும் திறந்தவெளி ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டு, மக்கள் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறி வருகின்றனர். ரம்ஜான் பண்டிகையையொட்டி பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com