ராமேசுவரம்-உப்பள்ளி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு

அடுத்த மாதம் (மார்ச்) 22, 29 மற்றும் ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.ரெயில்கள் தற்போது பராமரிப்பு பணி காரணமாக மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
ராமேசுவரம்-உப்பள்ளி இடையிலான எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ரத்து- தெற்கு ரெயில்வே அறிவிப்பு
Published on

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-07355) அடுத்த மாதம் (மார்ச்) 22, 29 மற்றும் ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல, ராமேசுவரத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு உப்பள்ளி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (07356) அடுத்த மாதம் 23, 30 மற்றும் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மேற்கண்ட ரெயில்கள் தற்போது பராமரிப்பு பணி காரணமாக மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com