

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று சேலம் மாவட்டத்தின் பள்ளப்பட்டி பகுதியில், சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அருளை ஆதரித்து நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
இந்த பிரச்சாரத்தை முடித்துவிட்டு மேடையிலிருந்து இறங்கிய போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ராமதாஸ் மயங்கியுள்ளார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அருகில் இருந்த தொண்டர்கள் அவரைத் தாங்கிப் பிடித்தனர்.
அவர் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சர்க்கரை அளவு குறைந்ததால் திடீர் மயக்கம் ஏற்பட்டதாகவும், தற்போது அவர் இயல்புநிலைக்கு திரும்பியதாகவும் தெரிவித்துள்ளனர்.