டெல்லி மேல்சபை எம்.பி. தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் முதலாவதாக வேட்புமனு தாக்கல்

என்னைப்போல் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வருவதில்லை. அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே ஒவ்வொரு முறையும் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன் என்றார்.
சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன்
Published on

டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இதில் சுயேட்சையாக போட்டியிட தேர்தல் மன்னன் என்று அழைக்கப்படும் வேட்பாளர் பத்மராஜன் தேர்தல் அதிகாரி தேன்மொழியிடம் தனது வேட்பு மனுவை வழங்கினார்.

சுயேட்சை வேட்பாளர் பத்மராஜன் வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு நிருபர்களிடம் கூறியதாவது:-

இன்று 255 வது முறையாக டெல்லி மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிட மனு செய்து உள்ளேன். 1988-ல் முதலாவதாக தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய தொடங்கினேன்,

இதுவரை 1 கோடி ரூபாய் வரை இதற்காக செலவு செய்துள்ளேன். என்னைப்போல் யாரும் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வருவதில்லை. அவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவே ஒவ்வொரு முறையும் வேட்பு மனு தாக்கல் செய்கிறேன் என்றார்.

X

Maalai Malar
www.maalaimalar.com