சென்னையைக் குளிர்வித்த மழை.. வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி

கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.அடுத்த 12 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையைக் குளிர்வித்த மழை.. வெப்பம் தணிந்து மக்கள் நிம்மதி
Published on

தலைநகர் சென்னையில் கோடை வெயில் தகித்து வந்த நிலையில் இன்று பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், புதுப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த நாட்களில் நிலவி வந்த வெப்பம் ஓரளவு தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இருப்பினும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காலை அலுவலகங்களுக்குச் செல்லும் ஊழியர்கள் சிரமத்தை எதிர்கொண்டனர்.

சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 12 மணிநேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com