

பிரபல நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலில் ஈடுபட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார். புதிய கட்சி தொடங்குவதா அல்லது ஏற்கனவே உள்ள கட்சியில் இணைவதா என்பது குறித்து தனது ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தி, இறுதி முடிவை தெரிவிப்பதாக ராகவா லாரன்ஸ் தெரிவித்து இருந்தார்.
இதையடுத்து கடந்த சில தினங்களாக திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் த.வெ.க. சார்பில் ராகவா லாரன்ஸ் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இதுதொடர்பாக ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில்,
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட மாட்டேன்.
ஆசைக்காக அரசியலுக்கு வரமாட்டேன். மக்களுக்காக தான் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.