புரட்டாசி மாத பவுர்ணமி- திருவண்ணாமலையில் திரளான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள்திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும்.
திருவண்ணாமலையில் இன்று காலை பக்தர்கள் கிரிவலம் சென்றபோது எடுத்த படம்.
திருவண்ணாமலையில் இன்று காலை பக்தர்கள் கிரிவலம் சென்றபோது எடுத்த படம்.
Published on

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்கள் இங்குள்ள மலையை சுற்றி கிரிவலம் செல்வார்கள்.

இதனால் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலம் போல் பூண்டிருக்கும். புரட்டாசி மாத பவுர்ணமி கிரிவலம் இன்று அதிகாலை 4.06 மணிக்கு தொடங்கி நாளை திங்கட்கிழமை அதிகாலை 3.09 மணி வரையிலும் உள்ளன.

இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் இன்று அதிகாலை முதலே கிரிவலம் சென்றனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com