ஓடும் ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை- கீழே தள்ளிவிட்ட கொடூரம்

வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.
ஓடும் ரெயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை- கீழே தள்ளிவிட்ட கொடூரம்
Published on

கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரெயிலில் கர்ப்பிணி பெண் பயணம் செய்தார்.

வேலூர் கே.வி. குப்பம் அருகே ரெயில் சென்று கொண்டிருந்தபோது கர்ப்பிணி பெண் கழிவறைக்கு சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சிலர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து கத்திக் கூச்சலிட்டுள்ளார்.

கர்ப்பிணி பெண் குரல் கேட்டு சக பயணிகள் வருவதற்குள் அந்த நபர்கள் அவரை ஓடும் ரெயிலில் இருந்து கீழே தள்ளி விட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

தண்டவாளத்தில் படுகாயங்களுடன் கிடந்த கர்ப்பிணி பெண்ணை மீட்ட ரெயில்வே போலீசார் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். கர்ப்பிணி பெண்ணுக்கு கை, கால் முறிவு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ரெயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com