என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மின்வெட்டு- நோயாளிகள் அவதி
- சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
- மின் தடையை சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த நிலையில், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள 7 மாடி கட்டிடத்தில் இன்று சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து மருத்துவமனைக்கு விரைந்த மின் ஊழியர்கள் மின் தடையை சரிசெய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கட்டுமான பணியின்போது மின் வயர் துண்டிக்கப்பட்டதால் மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.
தொடர் மின் தடையால் நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
Next Story






