என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதுநிலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைப்பு
- அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.
- போட்டித் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
சென்னை:
முதுகலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 ஆகிய பணியிடங்களில் உள்ள 1,996 காலி இடங்களுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.) நேற்று முன்தினம் வெளியிட்டது. இதற்கு, அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், அதேநாளில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் 2ஏ முதல்நிலை தேர்வுகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அறிவிக்கப்பட்ட முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் நிலை-1, கணினி பயிற்றுனர் நிலை-1 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
Next Story






