

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்பு கடைசியாக 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. பின்னர் 2021-ம் ஆண்டு கணக்கெடுப்பு, கொரோனா காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.
இந்தியாவில் தற்போது 16-வது மக்கள்தொகை கணக்கெடுப்பு 2026-2027 காலகட்டத்தில் இரண்டு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதல் முறையாக இது முழுமையாக டிஜிட்டல் முறையில், பொதுமக்கள் தாங்களாகவே பதிவு செய்யும் வசதியுடன் நடத்தப்படுகிறது.
முதல்கட்ட பணி ஏப்ரல் 1-ந்தேதி முதல் செப்டம்பர் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது. இதில் வீடுகளின் தரம் மற்றும் அடிப்படை வசதிகள் சேகரிக்கப்படுகின்றன. 2-ம் கட்ட பணி அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற உள்ளது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் முழுக்க முழுக்க டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளன. இதில், 32 லட்சம் அரசு அலுவலர்கள் நாடு முழுவதும் ஈடுபட உள்ளனர்.
பல்வேறு மாநிலங்களிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதுவையில் நேற்று முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகள் பணிகள் தொடங்கின.
இந்நிலையில் தமிழ்நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி வரும் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது 33 கேள்விகள் கேட்கப்படும். மக்கள் தவறான தகவலை அளித்தால் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.