Transfer | த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் உள்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தவர் ஆவார்.
Transfer | த.வெ.க.வினர் மீது வழக்குப்பதிவு செய்த ஆய்வாளர் உள்பட 19 காவல்துறையினர் பணியிட மாற்றம்
Published on

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்து இன்னும் ஒருமாதம் கூட முடியவில்லை. எனினும், காவல் துறை மற்றும் ஆட்சியர்கள் என அதிகாரிகள் மாற்றம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு துறைகள் சார்ந்த அதிகாரிகள் மாற்றப்பட்டு வரும் நிலையில், காவல் துறையில் பணியிட மாற்றத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்பட 19 பேர் தெற்கு மற்றும் வடக்கு மண்டலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து காவல்துறை தலைமை இயக்குநரகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர் மணிவண்ணன் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்தவர் ஆவார்.

காவல்துறை தலைமை இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கரூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட 19 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் சம்பவத்தின்போது அங்கு பணிபுரிந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com