வாழப்பாடி அருகே இளம்பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினரிடம் போலீசார் அதிரடி விசாரணை

சினேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வாழப்பாடி அருகே இளம்பெண் தற்கொலை: கணவர் குடும்பத்தினரிடம் போலீசார் அதிரடி விசாரணை
Published on

வாழப்பாடி அடுத்த பேளூரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 25). இவர் அதே பகுதியில் இ-சேவை மையம் நடத்தி வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சினேகா (22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு யாசினி (2) என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் நேற்று பகல் 3 மணி அளவில் வீட்டில் இளம்பெண் சினேகா திடீரென தூக்கில் தொங்கினார். அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து போனது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் தற்கொலை செய்து கொண்ட இளம்பெண் சினேகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

திருமணமான 4 ஆண்டுகளுக்குள் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இதுகுறித்து சேலம் ஆர்.டி.ஓ. மற்றும் வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு வாழப்பாடி போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆர்.டி.ஓ. மற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் கார்த்தியேன் குடும்பத்தினரிடம், சினேகா குடும்பத்தினரிடமும் சினேகா இறந்த காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com