குமாரபாளையத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா- போலீசார் விசாரணை

அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர்.
குமாரபாளையத்தில் 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பெரியப்பா- போலீசார் விசாரணை
Published on

குமாரபாளையம் தனியார் தியேட்டர் அருகே வசிக்கும் 16 வயது சிறுமி சமீபத்தில் மேற்கு வங்காளம் சென்று வந்தார். இவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாததால் குமாரபாளையம் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் அழைத்து சென்றனர்.

அப்போது சிறுமி கர்ப்பமாக உள்ளார் என்று டாக்டர் கூறினார். இது பற்றி அந்த சிறுமியிடம் கேட்ட போது தனது வீட்டில் வேலை செய்யும் பெரியப்பா முறையுள்ள நபர் ஒருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பின் இது பற்றி யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டி மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் இது குறித்து குமாரபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com