கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!

குற்றம் சுமத்தப்பட்ட நபரும், சிறுமியும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
கும்மிடிப்பூண்டி 3 வயது சிறுமி குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு!
Published on

கும்மிடிப்பூண்டி அருகே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்று வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக அதே மாநிலத்தைச் சேர்ந்த பிபின் மஞ்சு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பொன்னேரியில் புதைக்கப்பட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்க திருவள்ளூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com