

சென்னையில் பெட்ரோல் விலை 10 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.77-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், சென்னையில் டீசல் விலை 10 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் டீசல் ரூ.95.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிலோ சிஎன்ஜி விலை எவ்வித மாற்றமும் இல்லாமல் ரூ.91.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
4 ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.3.14 காசுகளும், டீசல் விலை ரூ3.11 காசுகளும் உயர்த்தப்பட்டது.
அதன்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்பட்டது.
மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருவதாகவும், இது ரூ.28 வரை உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.