Petrol - Diesel Price | பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்

பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்த நிலையில் விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.
Petrol - Diesel Price | பெட்ரோல், டீசல் விலை- இன்றைய நிலவரம்
Published on

மத்திய கிழக்கு போர் சூழல், ஹார்முஸ் ஜலசந்தியில் கட்டுப்பாடு போன்ற காரணங்களால் சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது.

எண்ணெய் நிறுவனங்களின் நஷ்டத்தில் ஒரு பகுதியை ஈடுகட்ட கடந்த 15-ந்தேதி நாடு முழுவதும் பெட்ரோல்-டீசல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் மாற்றமின்றி இருந்த நிலையில் இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக குறைந்து வருகிறது.

நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 35 காசுகள் குறைந்த நிலையில், இன்று மேலும் 6 காசுகள் குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 6 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.104.51-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்து ஒரு லிட்டர் ரூ.96.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com