PETROL, DIESEL PRICE | பெட்ரோல், டீசல் விலை உயர்வு

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று 7வது முறையாக உயர்ந்துள்ளது.
Petrol, Diesel price hike
Published on

கடந்த 4 ஆண்டுகளாக பெட்ரோல்-டீசல் விலையில் பெரிய மாற்றம் இல்லாமல் இருந்தது. 2022-ம் ஆண்டில் ஏற்றம் கண்டதுபோல மீண்டும் வீரியம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. முன்புபோல் அடிக்கடி விலை உயர்வை காணத்தொடங்கியுள்ளது.

அதாவது மேற்காசியப் போரின் விளைவால் ஈரான் மூடிய ஹார்முஸ் நீரிணையால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு இப்போது அதன் விலை தாறுமாறாக உயர்ந்து கொண்டே வருகிறது.

கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் பெரும் இழப்பைச் சந்தித்து வந்தன. இந்த இழப்பை ஈடுசெய்ய மத்திய அரசு கலால் வரியை குறைத்தும், இழப்பு ஈடாகவில்லை.

இழப்பை ஈடுசெய்ய பெட்ரோல்-டீசல் விலை கடந்த 15-ம் தேதியில் இருந்து ஏறத் தொடங்கியது. அன்றைய தினம் பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் 6 காசும், டீசல் 3 ரூபாய் 8 காசும் உயர்ந்தது.

அதன் தொடர்ச்சியாக, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துக்கொண்டே இருக்கிறது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல், டீசல் விலை இன்று 7வது முறையாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ.108.01க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், டீசல் விலை லிட்டருக்கு 23 காசுகள் அதிகரித்து ரூ.99.78-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com