பண்ருட்டி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

 மின்சாரம் நிறுத்தம்
மின்சாரம் நிறுத்தம்
Published on

பண்ருட்டியில் உள்ள மேலப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை

மின்தடை

பண்ருட்டி நகரம் முழுவதும், திருவதிகை, தி. ராசாபாளையம், செட்டிபட்டறை நகர், புதிய கடலூர் ரோடு, பழைய கடலூர் ரோடு, ஆ. ஆண்டிக்குப்பம், இருளக்குப்பம், சீரங்குப்பம், தி.ராசாப்பாளையம், எல்.என்.புரம், கந்தன் பாளையம், பூங்குணம், பணிக்கன்குப்பம், தாழம்பட்டு, மாளிகம்பட்டு, பிள்ளையார் குப்பம், செம்மேடு, மந்திப்பாளையம், சிறுவத்தூர், அங்குச்செட்டிப்பாளையம் மற்றும் கொக்குபாளையம் ஆகிய பகுதிகளைச் சார்ந்த ஊர்களுக்கும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இத்தகவலை மின்சார வாரிய செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com