பணிக்கம்பட்டியில் நாளை மின்சாரம் நிறுத்தம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.
power cut
மின்சாரம் நிறுத்தம்
Published on

பல்லடம் அருகே உள்ள காளிவேலம்பட்டி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி, பல்லடம் அண்ணாநகர், மின்நகர், காளிவேலம்பட்டி, லட்சுமிமில், பெரும்பாளி, செம்மிபாளையம், சுக்கம்பாளையம், ஊஞ்சப்பாளையம், ராசக்கவுண்டம்பாளையம், சின்னியகவுண்டம் பாளையம், ரங்கசமுத்திரம், பணிக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது. இந்த தகவலை பல்லடம் வட்ட மின் பகிர்மான செயற்பொறியாளர் பழனிச்சாமி தெரிவித்து உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com