தொழிலாளர் தினத்தையொட்டி மே 1-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு

அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
தொழிலாளர் தினத்தையொட்டி மே 1-ந் தேதி மதுக்கடைகளை மூட உத்தரவு
Published on

சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் டாக்டர் அ.அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளதாவது:-

தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மதுபானக்கடைகள் மூடப்பட வேண்டுமென அரசு தெரிவித்துள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எப்.எல்.1, எப்.எல்.2, எப்.எல்.3, எப்.எல்.3ஏ மற்றும் எப்.எல்.3ஏஏ உரிமம் பெற்ற ஓட்டல் மற்றும் கிளப்புகளில் இயங்கிவரும் மதுபான கூடங்கள், டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் டாஸ்மாக் (எப்.எல்.11) மதுபானக்கடைகளுடன் இணைந்துள்ள மதுபானக்கூடங்கள் அனைத்தும் தொழிலாளர் தினமான 1.5.2026 (வெள்ளிக்கிழமை) அன்று மூடப்பட வேண்டும்.

மேலும் அன்றைய தினம் இதனை மீறி விற்பனை செய்பவர்கள் மீது அரசு விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com