

கோவை விமான நிலையத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பி.எம்.ஸ்ரீ திட்டம் தொடர்பாக த.வெ.க. கொள்கை முடிவை அரசியல் போல பேசுவது சரி அல்ல. இப்படி எல்லாம் செய்ததால் தான் மக்கள் தி.மு.க. அரசை புறக்கணித்தார்கள். மும்மொழி கொள்கையை தி.மு.க. கூட்டணி கட்சிகள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக தான் த.வெ.க. அரசு எதிர்க்கிறது.
நாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது நடக்கவில்லை. இந்த தேர்தலில் தி.மு.க. தோற்கடிக்கப்பட வேண்டும் என்று நினைத்தது நடந்து இருக்கிறது. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, முஸ்தபா ஆகியோர் சனாதனம் குறித்து பேசுவதை முதலமைச்சர் விஜய் கண்டிக்க வேண்டும். கிட்னி முறைகேடு தொடர்பான விசாரணையை முடுக்கி விடப்பட வேண்டும் என்ற தகவல் வந்து உள்ளது.
கடந்த ஆட்சியில் நடந்த பிரச்சனைகள் இரட்டைப்படை ஆகி விட்டதோ என்ற அச்சம் இருக்கிறது. முதலமைச்சர் விஜய் காலை முதல் மாலை வரை அலுவலகத்தில் இருப்பது மகிழ்ச்சி. புதியவர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலில் லேசான மழை பெய்யும் என நினைத்தோம். ஆனால் சுனாமியே வந்து விட்டது.
இந்த தோல்வி, வெற்றி பெறக்கூடிய தோல்வி என எடுத்துக் கொள்ளலாம். செப்புத் தகடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் பேசியிருக்க இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இறுதியாக அவரிடம், அண்ணாமலை மீண்டும் மாநில தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளாரா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கைக் கூப்பி கும்பிட்டவாறு அங்கு இருந்து சென்றார்.