

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிபு இன்று மாலையுடன நிறைவடைந்தது. தமிழகம் முழுவதும் 84.69 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. நெல்லை மாவட்டத்தில் 77.44 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்காளர்கள் தங்களது வாக்குகளை எளிதாக செலுத்த 1678 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில் ஒரு வாக்குச்சாவடியில் வெறும் 5 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. நெல்லை மாவட்டம் பெரும்பத்து கிராமத்தில் மொத்தம் 969 வாக்காளர்கள் உள்ளர்கள். இவர்களுக்காக 290-வது வாக்குச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. இந்த வாக்குச்சாவடிக்கு யாருமே வாக்களிக்க வரவில்லை. 5 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர்.
சமீபத்தில் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்தில் இரட்டைக் கொலை நடைபெற்றது. இதை கண்டித்து, 2026 சட்டமன்ற தேர்தலை முழுமையாக புறக்கணிப்பதாக கிராமத்தினர் அறிவித்திருந்தனர்.