ஓணம் பண்டிகை: சென்னை-கேரளா விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு

விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.
ஓணம் பண்டிகை: சென்னை-கேரளா விமான கட்டணம் 3 மடங்கு அதிகரிப்பு
Published on

ஆலந்தூர்:

ஓணம் பண்டிகை வரும் 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

இதை அடுத்து சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் வசிக்கும் கேரள மாநிலத்தவர்கள், பெருமளவு விமானங்களில், கேரளாவுக்கு செல்லத் தொடங்கி உள்ளனர்.

இதனால் சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் அனைத்து விமானங்களிலும், பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது.

இதையடுத்து விமான கட்டணங்களும் 3 மடங்கு, ராக்கெட் வேகத்தில் உயர்ந்து உள்ளன.

சென்னை-திருவனந்தபுரம் வழக்கமான விமான கட்டணம் ரூ.3,225. ஆனால் தற்போதைய கட்டணம் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.19,089 வரை.

சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ.2,962. தற்போதைய கட்டணம் ரூ. 6,500 முதல் ரூ.10,243 வரை.

சென்னை-கோழிக் கோடு, வழக்கமான கட்டணம்-ரூ.3,148.

ஆனாலும் பயணிகள் கட்டண உயர்வை பற்றி கவலைப்படாமல், ஓணம் பண்டிகையை சொந்த ஊரில், குடும்பத்தினருடன் கொண்டாட வேண்டும் என்ற ஆர்வத்தில், விமானங்களில் பயணம் செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com