#GasShortage தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் நிலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்

நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு, வணிக சிலிண்டர்களின் விவரங்கள் கேட்கப்பட்டது.வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.
#GasShortage தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்களின் நிலை குறித்து எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம்
Published on

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

கடந்த மாதம் (பிப்ரவரி) 28-ந்தேதி தொடங்கிய இந்த போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. தங்களது நாடு மீது தாக்குதல் நடத்தும் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு தரப்புக்கும் இடையே போர் தீவிரம் அடைந்து வருகிறது. கடந்த 10 நாட்களாக இந்த போர் நீடித்து வருகிறது.

இந்த போர் காரணமாக அரபு நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் தலைமையில் நேற்றிரவு அவசர ஆலோசனை நடைபெற்றது.

தலைமைச் செயலாளர் முருகானந்தம் தலைமையிலான அதிகாரிகள் சமையல் எரிவாயு தட்டுப்பாடு தொடர்பாக அவசர ஆலோசனை நடத்தினர்.

நேற்றிரவு நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு, வணிக சிலிண்டர்களின் விவரங்கள் கேட்கப்பட்டது.

ஆலோசனையின்போது கையிருப்பில் உள்ள சமையல் எரிவாயு விபரங்களை இன்று பிற்பகலுக்குள் தெரிவிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

வீட்டு உபயோக சிலிண்டர்கள் கையிருப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை கோரிய நிலையில் தமிழகத்தில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் 3 வாரங்களுக்கு இருப்பு உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் வணிக சிலிண்டர் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com