அணுக்கனிமம் விவகாரம்: தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு..!- திமுக எம்பி கனிமொழி

தென் மாவட்ட மக்களுக்கு தவெக அரசு செய்யும் பெரும் துரோகமாகும்.
DMK MP Kanimozhi
Published on

அணுக்கனிமம் விவகாரத்தில் தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகம் என திமுக எம் கனிமொழி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-

கன்னியாகுமரியில் அணுக்கனிம சுரங்கம் அமைப்பதற்கான நில ஒதுக்கீட்டு ஆணையை, அது காலாவதியாகும் கடைசி நாளன்று, ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு அரசாணை வெளியிட்டிருப்பது ஏற்புடையதல்ல.

அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என தங்கள் கட்சியின் செயற்குழுவில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, இப்போது சுற்றுச்சூழலுக்கு மிகவும் ஆபத்தான ஒன்றிய அரசின் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கும் வகையில் செயல்படும் இந்த தவெக அரசின் இரட்டை நிலைப்பாடு, தென் மாவட்ட மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகும்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com