புத்தாண்டு கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 570 சிறப்பு பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது

கிளாம்பாக்கத்தில் இருந்து இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.4-ந்தேதி 765 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டம்.
புத்தாண்டு கொண்டாட்டம்- சென்னையில் இருந்து 570 சிறப்பு பஸ்கள் இன்றும், நாளையும் இயக்கப்படுகிறது
Published on

சென்னை:

புத்தாண்டையொட்டி அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பாக இன்று முதல் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று 240 பஸ்களும், நாளை 255 பஸ்களும் இயக்கப்படுகிறது.

கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்றும், நாளையும் 55 பஸ்களும் மாதவரத்தில் இருந்து 20 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

மேலும் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப ஜனவரி 3-ந்தேதி 525 பஸ்களும், 4-ந்தேதி 765 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்து உள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com