நெத்திமேடு சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

வெள்ளாளகுண்டம், காட்டு வேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
நெத்திமேடு சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்
Published on

சேலம்:

சேலம் மாவட்டம் நெத்திமேடு துணை மின் நிலையம், பூலாவரி மின் பாதைகளில் நாளை (19-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை கொண்டலாம்பட்டி,

சின்ன கொண்டலாம்பட்டி, ரங்காபுரம், நெய்க்காரப்பட்டி, என்.மேட்டுத்தெரு, பூலாவரி, ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்தார்.

சேலம் மின் பகிர்மான வட்டம் மேட்டுப்பட்டி துணை மின் நிலையம் முத்தம்பட்டி, வேப்பிலைப்பட்டி ஆகிய மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (19-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை வேப்பிலைப்பட்டி, சேசன்சாவடி,

திருமனூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளாளகுண்டம், காட்டு வேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் அன்பரசன் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com