50 லட்சம் கையெழுத்துகளை கடந்தது நீட் விலக்கு இயக்கம்- அமைச்சா் உதயநிதி தகவல்

இணையவழியில் 40 லட்சமும், அஞ்சல் அட்டை வழியாக 15 லட்சமும் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன.17-ந் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையொப்பங்கள் குவிகின்ற வகையில் நாம் தொடா்ந்து செயலாற்றுவோம்.
50 லட்சம் கையெழுத்துகளை கடந்தது நீட் விலக்கு இயக்கம்- அமைச்சா் உதயநிதி தகவல்
Published on

சென்னை:

நீட் விலக்கை வலியுறுத்தி பெறப்படும் கையொப்பங்கள் இதுவரை 50 லட்சத்தைத் தாண்டி உள்ளதாக அமைச்சரும் தி.மு.க. இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:-

நீட் விலக்கை வலியுறுத்தி, தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவா் அணி சாா்பில் கையொப்ப இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. 50 லட்சம் கையொப்பங்களைப் பெற இலக்கு நிா்ணயிக்கப்பட்டிருந்தது. அந்த இலக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அதிகரித்து இப்போது 55 லட்சம் ஆகியுள்ளது. இணையவழியில் 40 லட்சமும், அஞ்சல் அட்டை வழியாக 15 லட்சமும் என 55 லட்சம் கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன. தொடா்ந்து, கையொப்ப மிட்டு மக்கள் தங்களது நீட் எதிா்ப்பைப் பதிவு செய்து வருகிறாா்கள். நீட் எதிா்ப்புணா்வு தமிழ்நாட்டில் பேரலையாய் திரண்டிருக்கிறது என்பதற்கான சான்று இதுவாகும். டிச. 17-ந் தேதி சேலம் இளைஞரணி மாநில மாநாட்டுக்குள் மேலும் பல லட்சம் கையொப்பங்கள் குவிகின்ற வகையில் நாம் தொடா்ந்து செயலாற்றுவோம்.

ஜனாதிபதியின் ஒற்றைக் கையொப்பத்தைப் பெறுவதற்காக நாம் பெறும் இத்தனை லட்சம் கையொப்பங்களும் நீட் ஒழிப்பு வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். தகுதி, தரம் என்று ஏமாற்றி நீட்டைத் திணிப்பவா்கள், அதற்கெதிரான ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com