நாமக்கல்லில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - மக்கள் சாலை மறியல்

தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
நாமக்கல்லில் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - மக்கள் சாலை மறியல்
Published on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே 3 வயது சிறுமி மற்றும் 12 வயது சிறுமிக்கு முதியவர் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலை தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

அதேபோல 12 வயது சிறுமி ஒருவருக்கும் அவர் தொல்லை அளித்ததாக தெரியவந்துள்ளது.

புகாரை அடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வரதராஜ் என்ற 59 வயது நபரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே குமாரபாளையம் எம்ஜிஆர் நகரில் காவல் நிலையம் முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

குற்றவாளியை தங்களிடம் காண்பிக்கக்கோரி வர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து காவல்நிலையத்தில் வாயிற்கதவு முன்னெச்சரிக்கையாக மூடப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com