ஆசிரியை வீட்டில் புகுந்து 32 பவுன் நகை கொள்ளை- அரிவாளை காட்டி மிரட்டி மர்மநபர்கள் துணிகரம்

வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு அதன் வழியாக மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.
கொள்ளை நடந்த ஆசிரியை சகிலா வீட்டை படத்தில் காணலாம்.
கொள்ளை நடந்த ஆசிரியை சகிலா வீட்டை படத்தில் காணலாம்.
Published on

பணகுடி:

பணகுடி அருகே உள்ள வடக்கன்குளத்தை சேர்ந்தவர் டேனியல் சேகர். இவரது மனைவி சகிலா(வயது 55). இவர்களது மகள் மேரி செல்சியா(23).

டேனியல் சேகர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். சகிலா வடக்கன்குளத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். இதனால் அப்பகுதியில் தனது மகளுடன் சகிலா வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று மாலையில் சகிலாவும், செல்சியாவும் வீட்டில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்துக் கொண்டு அதன் வழியாக மர்ம நபர்கள் சிலர் வீட்டுக்குள் புகுந்துள்ளனர்.

உடனே சகிலாவும், அவரது மகளும் கத்தி கூச்சலிட்டுள்ளனர். ஆனால் அதற்குள் சுதாரித்துக்கொண்ட மர்ம நபர்கள் ரத்தம் சொட்ட சொட்ட கொண்டு வந்திருந்த அரிவாளை காட்டி 2 பேரையும் மிரட்டினர்.

பின்னர் அறையில் உள்ள பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 32 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துவிட்டு தப்பி சென்றனர். உடனே சகிலா பணகுடி போலீசுக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், வீட்டில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அரிவாளில் இருந்து விழுந்த ரத்தத்தை சோதனை செய்தபோது கோழியின் ரத்தம் என்பதும், வீட்டில் இருப்பவர்களை மிரட்டுவதற்காக அதனை அரிவாளில் தடவி வந்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com