பாளை அருகே 2 ½ வயது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை

தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்திற்கு திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் நெல்லை ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது.
பாளை அருகே 2 ½ வயது பெண் குழந்தையை தூக்கில் தொங்கவிட்டு தாய் தற்கொலை
Published on

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள நடுவக்குறிச்சியை சேர்ந்தவர் கந்தசாமி. கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, தங்கம் (வயது 21) உள்ளிட்ட 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்பட்டி அருகே உள்ள தட்டான்குளத்தை சேர்ந்த மகராஜன் என்பவருடன் தங்கத்திற்கு திருமணம் ஆனது. அவர்களுக்கு 2 1/2 வயதில் பெண் குழந்தை உள்ளது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டதால், கடந்த 1 வருடத்திற்கு முன்பு தங்கம் தனது பெண் குழந்தையுடன் நடுவக்குறிச்சியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார்.

அதன் பின்னர் விவாகரத்து தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் தனது பெண் குழந்தையுடன் தங்கம் மன வேதனையில் இருந்துள்ளார். அதை தொடர்ந்து நேற்று மாலை பெற்றோர் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டில் இருந்த தங்கம் திடீரென தனது குழந்தையை தூக்கில் தொங்கவிட்டுள்ளார்.

பின்னர் அவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவில் அவரது பெற்றோர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, தாய்-மகள் 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர். அவர்களது அழுகுரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தகவல் அறிந்து பாளை தாலுகா போலீசாரும் அங்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கம் மற்றும் அவரது பெண் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கத்திற்கு திருமணம் ஆகி 4 வருடங்களே ஆவதால் நெல்லை ஆர்.டி.ஓ. விசாரணை நடந்து வருகிறது. இளம்பெண் குழந்தையுடன் தற்கொலை செய்து கண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com