ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவர்களில் 5-க்கும் மேற்பட்டோர் பணத்தை ஒப்படைத்தனர்

ஜெயக்குமார் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவர்களில் 5-க்கும் மேற்பட்டோர் பணத்தை ஒப்படைத்தனர்
Published on

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு கடந்த 30-ந்தேதி எழுதியிருந்த கடிதத்தில் தனக்கு பணம் கொடுக்க வேண்டியவர்களின் விபரங்களை எழுதியிருந்தார்.

மேலும் அவர் தனது மருமகன் ஜெபாவுக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு வரவேண்டிய பணம், மற்றவர்களுக்கு தான் கொடுக்க வேண்டிய பணம் குறித்தும் விளக்கமாக எழுதி இருந்தார்.

இந்நிலையில் தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த தொழில் அதிபர்கள் உள்பட சுமார் 5-க்கும் மேற்பட்டோர் ஜெயக்குமாருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி ஒப்படைத்து விடுவதாக போலீசாரிடம் விசாரணைக்கு ஆஜராகும்போது தெரிவித்திருந்தனர்.

அதன்படி இதுவரை சுமார் ரூ.50 லட்சம் வரையிலான பணம் ஜெயக்குமாரின் குடும்பத்தினரிடம் திரும்ப வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com