சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர பஸ் பயண அட்டை - பயணிகளுக்கு புதிய வசதி

மாநகர பஸ்களில் ரூ.1000, ரூ.2000க்கான மாதாந்திர பஸ் பயண அட்டைகளும் விநியோகிக்கப்படுகிறது.
சென்னை ஒன் செயலி மூலம் மாதாந்திர பஸ் பயண அட்டை - பயணிகளுக்கு புதிய வசதி
Published on

சென்னை:

சென்னையில் போக்குவரத்து சேவைகளை ஒருங்கிணைப்பதற்காக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் (குப்டா) ஏற்படுத்தப்பட்டது.

இந்தக் குழுமம் வாயிலாக சென்னை ஒன் என்ற செயலி உருவாக்கப்பட்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயலி வழியாக மெட்ரோ ரெயில், மின்சார ரெயில், பஸ்களில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகளை கியூ.ஆர். குறியீடு வழியாக பெறலாம்.

இந்த மூன்று சேவைகளுக்கும் சேர்த்து அல்லது தனித்தனியாகவும் மக்கள் இந்த செயலியில் டிக்கெட் பெற முடியும். இந்த செயலியை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் மாநகர பஸ்களில் ரூ.1000, ரூ.2000க்கான மாதாந்திர பஸ் பயண அட்டைகளும் இதில் விநியோகிக்கப்படுகிறது.

அதன்படி செயலி மூலம் புகைப்படம் மற்றும் தொகையை பதிவேற்றி மாதம் தோறும் பயன் அட்டைகளை புதுப்பித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பஸ்சில் ஏறியதும் சென்னை ஒன் செயலியில் உள்ள மாதாந்திர பயண அட்டையில் பயணிக்கும் பஸ்சின் எண்களை பதிவிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு முறை பயணத்தின் போதும் பஸ்சின் எண்களை பதி விடுவது சிரமமாக இருப்ப தாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அந்த செயலியில் உள்ள மாதாந்திர பஸ் அட்டையை கண்டக்டரிடம் இனி காண்பித்தால் போதும் என்று குப்டா தெரிவித்து உள்ளது. இந்த புதிய வசதி பயணிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com