கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு

கொளத்தூரில் 20,504 வாக்குகள் பெற்று தவெக பாபு முன்னிலையில் உள்ளார்.
கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைவு
Published on

தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணியில் இருந்து எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தொகுதி முன்னிலை நிலவரத்தின்படி தவெக தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. அதிமுக 2வது இடத்திலும் திமுக 3வது இடத்திலும் உள்ளது.

காலை 10.30 மணி நிலவரப்படி 234 தொகுதிகளில் த.வெ.க. 102, அ.தி.மு.க. கூட்டணி 81, தி.மு.க.கூட்டணி 51 ஆகிய இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இதுவரை எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்நிலையில், கொளத்தூர் தொகுதியில் 6-வது சுற்றிலும் மு.க.ஸ்டாலின் பின்னடைந்துள்ளார்.

கொளத்தூரில் 19,804 வாக்குகள் பெற்று தவெக பாபு முன்னிலையில் உள்ளார். மு.க.ஸ்டாலின் 17,975 வாக்குகள் பெற்று பின்னடைந்துள்ளார்.

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் உள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com