

சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்ட புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார். இதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
* கோடை விடுமுறை முடிந்து 4 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜூன்1-ந்தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
* 1 முதல் 3 வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 4-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
* வெயிலின் தாக்கத்தால் பள்ளி திறப்பு தேதி மாற்ற வேண்டும் என்றால் முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார்.