

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாக மின்சாரம் டிரிப் ஆகி மின் தடை ஏற்படுகிறது.
மின்தடை ஏற்பட்ட உடனே பிரச்சினைக்கு தீர்வு காணப்படுகிறது. ஒரு சில தனி நபர்களின் தவறுகளால் மின்வெட்டு ஏற்படுகிறது.
மின்தடைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பழைய டிரான்ஸ்பார்ம்கள் இருப்பதால் ஒரு சில இடங்களில் பழுது ஏற்படுகிறது. மீண்டும் மீண்டும் மின் தடை ஏற்படும் பகுதிகளில் துணை மின் நிலையங்கள், நிலத்தடி கம்பியை வலுப்படுத்த நடவடிக்கை.
மின் துறையில் எவ்வளவு சுரண்ட முடியுமோ, அவ்வளவு சுரண்டி விட்டனர்.
மின்தடை தொடர்பாக 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு லட்சம் பேர் பணிபுரியும் இடத்தில் 70000 பேர் தான் இருக்கின்றனர்.
தேவைக்கு ஏற்ப ஒப்பந்த ஊழியர்களும் பணியமர்த்தப்படுகின்றனர்.
மின் துறையில் எங்கெல்லாம் ஊழல் நடக்கிறதோ, அதை உடனே நிறுத்த வேண்டும். மின்சார துறை 20 ஆண்டுகளாக தொடர் நஷ்டத்தில் உள்ளது. மின்சார துறை 2.5 லட்சம் கோடி கடனில் உள்ளது.
இதேநிலை 5 ஆண்டுகள் நீடித்தால் மின் ஊழியர்களின் வேலையே பறிபோகும். தவறு செய்பவர்கள் கரூராக இருந்தாலும், கோவையாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
எங்கெல்லாம் தவறுகள் நடக்கிறதோ அதை சரி செய்து வருகிறோம். சீரமைக்க வேண்டிய இடங்களில் சீரமைத்து வருகிறோம். இதற்கு சில நாட்களோ, சில மாதங்களோ பிடிக்கலாம். கண்டிப்பாக முழுமையாக சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.