நான் முதல்வன் திட்டம் முடக்கப்படவில்லை - அமைச்சர் நிர்மல்குமார்

சி.வி.சண்முகம் தரப்பை முதலமைச்சர் சந்தித்ததில் தவறு இல்லை.
Minister Nirmal kumar
Published on

தலைமைச் செயலகத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* கட்சி நிதி பற்றி பேசியதும் திருடனுக்கு தேள் கொட்டியதை போல் பேரவையை விட்டு வெளியேறி விட்டனர்.

* எதிர்க்கட்சி தலைவர் அவருடைய அறையில் இருந்து முதல்வர் உரையை முழுவதுமாக பார்த்துள்ளார்.

* எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது கிண்டல் செய்த திமுக தான் தற்போதைய முதல்வரையும் கிண்டல் செய்கிறது.

* பேசுவதற்கு ஒரு பாணி உள்ளது, எம்ஜிஆர் பேசியபோதும் இப்படி தான் கிண்டல் செய்தனர்.

* புரோக்கர்கள் நடமாடிய தலைமைச் செயலகத்தில் தற்போது சாமானிய மக்கள் வந்து செல்கின்றனர்.

* தலைமைச் செயலகத்தில் தற்போது அமைச்சர்களை மக்கள் சந்திக்க முடிகிறது.

* அனைத்துக்கட்சி தலைவர்களையும் முதலமைச்சர் சந்தித்தபோது இபிஎஸ்-ஐ சந்திக்க நேரம் கேட்டோம்.

* இபிஎஸ்-ஐ சந்திக்கவும் நேரம் கேட்கப்பட்டது, உட்கட்சி பூசலால் தற்போது சந்தித்தால் நன்றாக இருக்காது என கூறினர்.

* சி.வி.சண்முகம் தரப்பை முதலமைச்சர் சந்தித்ததில் தவறு இல்லை.

* 40 நாட்கள் செய்த சாதனைகளை உள்ளடக்கிய உரையாக முதல்வர் உரை இருந்தது.

* நான் முதல்வன் திட்டம் முடக்கப்படவில்லை.

* பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆடியோ குறித்த உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய திமுக தயாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com