வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடா? - அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறவில்லை. விதிகளுக்கு உட்பட்டே நியமனம் செய்யப்பட்டனர்.
Minister Nirmal Kumar
Published on

வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வழக்கறிஞர்கள் நியமனம்

* மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்திற்காக தவெகவினர் லஞ்சம் பெற்றதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

* வழக்கறிஞர்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

* நேற்று மாலை முதல் வழக்கறிஞர்கள் நியமனம் நடைபெற்று வருகிறது.

* அரசு வழக்கறிஞர்கள் நியமனம் மிகவும் நேர்மையாக நடந்து வருகிறது.

* மாவட்ட வழக்கறிஞர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறவில்லை. விதிகளுக்கு உட்பட்டே நியமனம் செய்யப்பட்டனர்.

கடும் நடவடிக்கை

* யாராவது அரசு வழக்கறிஞர் நியமனத்திற்கு பணம் பெற்றிருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* யாருடைய பெயரையாவது தவறாக பயன்படுத்தினாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

* இதுவரை 3 மாவட்டங்களுக்கு மட்டுமே அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

* தற்போது நடைபெறும் நியமனம் 6 மாதங்களுக்கு தற்காலிகமானது.

* யாராவது பணம் வாங்கியிருந்தால், பணம் அளித்தவர்கள் புகார் அளிக்கலாம்.

* அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இடையூறாக ஆய்வு செய்ய வேண்டாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆளுநர் ஆய்வு

* ஆளுநர் ஆய்வு செய்வதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. தேவையின்றி ஆய்வு நடத்தக்கூடாது என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com