கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு - அமைச்சர் கோவி.செழியன்

பாலிடெக்னிக் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.5ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும்.2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கவுரவ விரிவுரையாளர்களுக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு - அமைச்சர் கோவி.செழியன்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் புதிதாக திறக்கப்பட்ட அரசு கலை கல்லூரிக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பெயர் பலகையை இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழக அரசு கவுரவ விரிவுரையாளர்கள் 9646 பேருக்கு மாதம் ரூ.5000 சம்பளம் உயர்வு வழங்கப்படும். அதாவது அவர்களின் மாத ஊதியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.30 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதேபோல் பாலிடெக்னிக் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்களுக்கும் ரூ.5ஆயிரம் சம்பள உயர்வு வழங்கப்படும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2700 உதவி பேராசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com