அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு

அங்கன்வாடி பணியாளர்கள், மையத்தில் குடிநீர் வசதி தொடர்பான சிரமங்களை எடுத்துரைத்து தண்ணீர் சுத்திகரிப்பு அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.
அங்கன்வாடி மையத்தில் அமைச்சர் என்.ஆனந்த் திடீர் ஆய்வு
Published on

தமிழக முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தலின் படி நேற்று காலை, ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் தி. நகர் எம்.எல்.ஏ.வுமான என்.ஆனந்த் சென்னை மேற்கு மாம்பலத்தில் உள்ள அங்கன்வாடி மையத்திற்கு திடீரென நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

அப்போது மையத்தில் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடி பணியாளர்களிடம் அங்கன்வாடி மையத்தில் உள்ள குறைகள் மற்றும் வசதிகள் குறித்து அமைச்சர் என். ஆனந்த் ஆலோசனை நடத்தினார்.

அங்கன்வாடி பணியாளர்கள், மையத்தில் குடிநீர் வசதி தொடர்பான சிரமங்களை எடுத்துரைத்து தண்ணீர் சுத்திகரிப்பு அமைத்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.

உடனடி நடவடிக்கை

இதனை கவனத்தில் கொண்ட அமைச்சர் ஆனந்த் உடனடியாக புதிய தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் நிறுவுவதற்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், கோரிக்கை வைக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே அங்கன்வாடி மையத்தில் புதிய தண்ணீர் சுத்திகரிப்பு எந்திரம் நிறுவப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.

அமைச்சரின் விரைவான நடவடிக்கையால் மகிழ்ச்சியடைந்த அங்கன்வாடி பணியாளர்கள், குழந்தைகளின் நலனில் அக்கறை கொண்டு உடனடி தீர்வு வழங்கிய அமைச்சர் ஆனந்துக்கு நன்றியை தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com