தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது ஏன்?- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்

இருமொழி கொள்கையில் த.வெ.க. உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது ஏன்?- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளக்கம்
Published on

சென்னை:

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா செய்தியாளர்களிடம் கூறுகையில்,

* உள்துறை செயலகத்தின் அறிக்கை அடிப்படையில் ஆளுநர் மாளிகையில் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது

* திமுக ஆட்சியிலும் அதே நடைமுறையை ஆளுநர் கடைபிடித்தார். மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோது உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது.

* மு.க.ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் தான் தமிழ்நாட்டில் முதன்முதலில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது.

* தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வேண்டும் என முதலமைச்சர் வலியுறுத்தி இருந்தார்.

* தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட வைப்பது பற்றி சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறோம்.

* இருமொழி கொள்கையில் த.வெ.க. உறுதியாக இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com