மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,135 கனஅடியாக அதிகரிப்பு

நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 21,135 கனஅடியாக அதிகரிப்பு
Published on

மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 17,906 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 21,135 கன அடியாக அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் 119.06 அடியாகவும், நீர் இருப்பு 91.97 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 16,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 500 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com