மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,712 கன அடியாக சரிந்தது

நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,712 கன அடியாக சரிந்தது
Published on

மேட்டூர்:

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கிறது. அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.

இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 6,712 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 107.50 அடியாகவும், நீர் இருப்பு 74.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது. தமிழக காவிரி டெல்டா பசானத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com