முதலமைச்சர் விஜயுடன் சந்திப்பு: 6 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்ததாக கமல் தகவல்

முதலமைச்சர் விஜயை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்ததாக கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜயுடன் சந்திப்பு: 6 முக்கிய கோரிக்கைகளை முன் வைத்ததாக கமல் தகவல்
Published on

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கடந்த 10-ந்தேதி முதலமைச்சராக பதவி ஏற்றார். அவரை பல்வேறு தரப்பினர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரும் மூத்த அரசியல் தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்தார்.

கடந்த ஐந்து நாட்களாக தலைமைச் செயலகளத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் மாநிலங்களவை எம்.பி.யும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசன் நீலாங்கரையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் விஜயை சந்தித்து பேசியுள்ளார்.

இது தொடர்பாக கமல் ஹாசன் தனது எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் அவர்களை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தேன். தமிழ்நாட்டை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்து கொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது.

பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் திரைப்படத் துறைக்கு தமிழ்நாடு அரசின் ஆதரவும் அரவணைப்பும் வேண்டும் என்பதை வலியுறுத்தி 6 முக்கியமான கோரிக்கைகளை அவரிடம் கொடுத்திருக்கிறேன். நன்மை மலரட்டும்.

இவ்வாறு கமல் ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com