மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவா? - ம.தி.மு.க தலைவர் வைகோ பரபரப்பு பேட்டி

தவெக அரசில் கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மக்களுக்கு மனதை குளிர்விக்க கூடிய, ஒரு ஆரோக்கியமான நிர்வாகமாக விளங்குகிறது.
MDMK MLAs Resignation Buzz
Published on

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் செயல்பட வைப்பதற்கான வேதாந்தாவின் 'கிரீன் காப்பர்' திட்டத்தை மாநில அரசு நிராகரிக்க வலியுறுத்தி மதிமுக தலைவர் வைகோ தமிழக முதலமைச்சர் விஜய்-யை சந்தித்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த வைகோ:-

இந்த தவெக அரசு அமைந்ததில் இருந்து கமிஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை. அது மக்களுக்கு மனதை குளிர்விக்க கூடிய, ஒரு ஆரோக்கியமான நிர்வாகமாக விளங்குகிறது.

கமிஷன், கரப்ஷன் என்ற சொற்களுக்கு இடமில்லாமல் ஜோசப் விஜய் அரசு இயங்குகிறது என்பது என்னுடைய கருத்து.

திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகுகிறார்கள் என்ற ஊகங்களுக்கு பதில் சொல்ல இயலாது.

சட்டமன்ற இடைத்தேர்தல் 6 தொகுதிகளுக்கு வரப்போகிறது. அதில் போட்டியிடுவது குறித்து பொதுக்குழு சகல கோணத்திலும் கருத்துக்களை பறிமாறும். அங்கு என்ன நிலைப்பாடு என்பது அன்றைக்குதான் முடிவு தெரியும்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து முதல்வரிடம் கூறிய போது, அவர் அதை நன்கு உற்று கவனித்துக் கொண்டார். எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. அவர் அதற்கு அனுமதி தரமாட்டார் என்று நம்பிக்கை இருக்கிறது.

கலைஞர் முதல் ஜெயலலிதா வரை பல முதல்வர்களை பார்த்தது குறித்து செய்தியாளர்கள் வைகோ-விடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், விஜய் எளிமையாக இருக்கிறார், இயல்பாக இருக்கிறார் மற்றும் வெளிப்படை தன்மையோடு இருக்கிறார் என்று கூறினார்.

இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் நிறுவன பொதுச்செயலாளர் வைகோ கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com