முருகன் கோவில் படிப்பாதையில் சுற்றிய காட்டு யானை- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்

கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
காட்டு யானை
Published on

கோவை மாவட்டம் மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது.

மருதமலை முருகன் கோவில்

இந்த கோவில் பக்தர்களால் ஏழாம் படை வீடு என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.

இதனால் கோவிலில் எப்போதும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். விடுமுறை தினம் என்பதால், கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

யானை

பக்தர்கள் படிப்பாதை வழியாகவும், மலைப்பாதைகளில் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் பயணித்து மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை, வனத்தை விட்டு வெளியேறிய காட்டு யானை மருதமலை கோவிலுக்கு பக்தர்கள் செல்லக்கூடிய மலைப்பாதையில் நின்றிருந்து.

பக்தர்கள் ஓட்டம்

வெகுநேரமாக அந்த யானை அங்கேயே சுற்றிதிரிந்தது. யானை வந்ததை பார்த்ததும் பக்தர்கள் பதறியடித்து ஓடினர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானையை காட்டுப்பகுதிக்கு அனுப்பினர். யானை சென்ற பின்னரே மக்கள் நிம்மதியடைந்தனர்.

மலைப்பாதையில் யானை நின்றதால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரரப்பு நிலவியது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com