நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA டைரக்டர் ஜெனரல் பதில் கேலிக்கூத்தானது- மாணிக்கம் தாகூர்

பாராளுமன்ற நிலைக்குழுவிம் என்.டி.ஏ. டைரக்டர் ஜெனரல், வினாத்தாள் முழுமையாக லீக் ஆகவில்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: NTA டைரக்டர் ஜெனரல் பதில் கேலிக்கூத்தானது- மாணிக்கம் தாகூர்
Published on

இளநிலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் இந்த மாதம் தொடக்கத்தில் நடத்தப்பட்டது. தேர்வு முடிந்த சில நாட்களில் வினாத்தாளில் உள்ள பெரும்பாலான கேள்விகள் அடங்கிய மாதிரி வினாத்தாள் வெளியானது. இது தேர்வு எழுதியவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் தேசிய தேர்வு முகமை நீட் தேர்வை ரத்து செய்தது.

பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை

இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழு முன் தேசிய முகமை டைரக்டர் ஜெனரல் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது வினாத்தாள் முழுமையாக லீக் ஆகவில்லை. குறிப்பிட்ட சில கேள்விகள் மட்டுமே வெளியாகின எனத் தெரிவித்திருந்தார்.

இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் இது தொடர்பாக கூறியதாவது:-

NTA தலைவரிடமிருந்து வந்திருக்கும் இந்த பதில் மிகவும் அபத்தமானது. கேலிக்கூத்தானது. அவர் இந்நேரம் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பது நம் அனைவருக்கும் தெரியும். கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானும் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பிரதமர் மோடி ஒருபோதும் அவ்வாறு செய்யமாட்டார். ஏனெனில் இது ஒரு கூட்டுச் சதி கும்பல் (cartel) போன்றது. மேலும் பாஜகவும் ஒருபோதும் அத்தகைய நடவடிக்கையை எடுக்காது.

இது பாஜக-வினருக்கு சாதகமாகச் செயல்படுகிறது. பாஜக தலைவர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனர். ஒரு நியாயமான விசாரணை நடத்தப்பட்டால், இதில் பல பாஜக முகங்கள் சம்பந்தப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வரும்.

இவ்வாறு மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com