தேவரை அவமதிக்கும் செல்லூர் ராஜூவின் வார்த்தைக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - மாணிக்கர் தாகூர்

செல்லூர் ராஜூவை ஆதரித்து பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.
தேவரை அவமதிக்கும் செல்லூர் ராஜூவின் வார்த்தைக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் - மாணிக்கர் தாகூர்
Published on

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மேற்கு தொகுதியில் 4-வது முறையாக போட்டியிடுகிறார். அவர் நேற்று சோலையழகுபுரம், எம்.கே.புரம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது செல்லூர் ராஜூவை ஆதரித்து பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பிரசாரம் செய்தார்.

தனக்காக பிரசாரம் மேற்கொள்ள வந்த அண்ணாமலை குறித்து செல்லூர் ராஜூ பேசுகையில், கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது சிங்கமாக, எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். முத்துராமலிங்கத்தேவரின் மறு உருவமாக அண்ணாமலை இருக்கிறார் என்று கூறினார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

செல்லூர் ராஜூவின் நகைச்சுவை உணர்வுக்கு அளவே இல்லாமல் போனது. தேவரை அவமதிக்கும் செல்லூர் ராஜூவின் வார்த்தைக்கு மதுரை மேற்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com